நீட் விலக்கு தொடர்பாக நடைபெறும் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பிய விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மசோதா திருப்பி அனுப்பப்பட்ட சூழலில், அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என பாஜக ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் நீட் விலக்கு தொடர்பாக நடைபெறும் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுகவும் அறிவித்துள்ளது. மற்ற கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில், சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி, மீண்டும் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க: மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் - நீட் விலக்கு மசோதா கடந்துவந்த பாதை