கிண்டி - தேசிய திறன் பயிற்சி நிறுவனம் பெயர் பலகையில் தமிழ் மொழி இடம்பெறாததால் சர்ச்சை

கிண்டி - தேசிய திறன் பயிற்சி நிறுவனம் பெயர் பலகையில் தமிழ் மொழி இடம்பெறாததால் சர்ச்சை
கிண்டி - தேசிய திறன் பயிற்சி நிறுவனம் பெயர் பலகையில் தமிழ் மொழி இடம்பெறாததால் சர்ச்சை
Published on

கிண்டியில் உள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தின் பெயர் பலகையில் தமிழ் மொழி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொழிற்கல்வி, பொறியியல் மாணவர்களுக்கான தொழில் பயிற்சி திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் 1968ம் ஆண்டு முதல் கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் தேசிய திறன் பயிற்சி நிறுவனம் மத்திய அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 500க்கும் அதிகமான மாணவர்கள் தொழிற்கல்வி பயின்று வரும் இந்த மத்திய அரசின் பயிலகத்தின் முகப்பு பெயர் பலகையில் தமிழ் மொழி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெயர் பலகையில் National Skill development Institution என ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே பெயர் பலகை இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் கல்வி நிறுவனம் இருப்பதால் மாநில மொழியான தமிழ், பெயர் பலகையில் இடம் பெற வேண்டும் என்பது அரசின் விதிகளில் ஒன்று. இந்நிலையில் மத்திய அரசின் கல்வி நிலையத்தில் இந்தி, ஆங்கிலம் இடம் பெற்று, தமிழ் மொழி இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

-ந.பாலவெற்றிவேல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com