மக்களவையில் தருமபுரி எம்.பி, செந்தில் குமார் கருப்புச் சட்டை அணிந்து பதவியேற்றார்.
17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் தொடர் என்பதால் தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலில் பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதி எம்பியாக பதவியேற்றார். தொடர்ச்சியாக அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோரும் மக்களவை எம்பிகளாக பதவியேற்றனர். மற்றும் ஸ்மிருதி இரானி, சதானந்த கவுடா உள்ளிட்ட அமைச்சர்களும் எம்.பி.க்களாக பதவியேற்றனர்.
பல்வேறு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும் நேற்று பதவியேற்றனர். இதையடுத்து இன்றும் பல்வேறு மாநில உறுப்பினர்கள் பதவியேற்றனர். இன்றைய நிகழ்வில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 39 எம்பிக்களும் பதவியேற்றனர். அனைவரும் தமிழ் மொழியிலேயே பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
பெரும்பாலான எம்.பிக்கள் வெள்ளை, சட்டை வேஷ்டியில் பதவியேற்றனர். தருமபுரி எம்.பி. செந்தில்குமார் கருப்பு சட்டை அணிந்து பதவியேற்றுக் கொண்டார்.