தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் இருக்கும் அரசு உதவிப்பெறும் மாணவிகள் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அவர்களின் பெற்றோர் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அரசு உதவிப்பெறும் பள்ளியில், கடந்த 8 ஆம் தேதி மாணவி ஒருவருக்கு காய்ச்சல் இருந்த நிலையில் அந்த மாணவிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து இதர மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகளில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து மேலும் 36 மாணவிகளுக்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மாணவிகள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.