தஞ்சையில் முறையாக வறட்சி நிவாரணம் வழங்க மறுத்ததாகக் கூறி, விவசாயி நடத்திய தாக்குதலில் கிராம நிர்வாக அலுவலர் கை உடைந்தது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள வேலூரைச் சேர்ந்த விவசாயி, குமார். இவருக்கு வறட்சி நிவாரணமாக மூன்றரை ஏக்கருக்கு 2,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரனிடம், குமார் கேள்வி எழுப்பிய போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தனக்கு தரவேண்டிய நிவாரணத்தை முறையாக வழங்கவில்லை என்று கூறி ஆத்திரமடைந்த விவசாயி குமார், கிராம அலுவலரை தள்ளிவிட்டதால் கீழே விழுந்து அவர் கை உடைந்துள்ளது. இதையடுத்து கை முறிந்த ராமச்சந்திரன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.