நெல்லை மாவட்டம் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அருவி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் சாரல் மழையால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.