“பாதிக்கப்பட்ட நீதிபதிகள்தான் வழக்கு தொடர வேண்டும்” - உயர்நீதிமன்றம்

“பாதிக்கப்பட்ட நீதிபதிகள்தான் வழக்கு தொடர வேண்டும்” - உயர்நீதிமன்றம்
“பாதிக்கப்பட்ட நீதிபதிகள்தான் வழக்கு தொடர வேண்டும்” - உயர்நீதிமன்றம்
Published on

தலைமை நீதிபதி தஹில் ரமாணி இடமாற்ற பரிந்துரையை எதிர்த்து தாக்கல் செய்யபட்ட மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது 

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில்ரமாணியை மேகாலய உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும் கொலிஜியத்தின் பரிந்துரையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேசசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2010ம் ஆண்டு ஆளுநர் ஒருவர் மாற்றம் செய்தததை எதிர்த்து தாக்கல் செய்யபட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பொது முக்கியதுவம் வாய்ந்த விவகாரங்களில் தனி நபர்கள் வழக்கு தொடரலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக சுட்டிகாட்டினார். 

அரசியல் சாசனம் 222 பிரிவில் நீதிபதிகளை இடம் மாற்றம் செய்வதை குறித்து கூறபட்டுள்ளதே தவிர தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்வதை பற்றி கூறபடவில்லை  என வாதிட்டார். நீதிபதிகள் நியமனம், பணி இடம் மாற்றம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் சேர்ந்து தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் தலைமை நீதிபதி தஹில்ரமாணியை இடமாற்றம் செய்தது நியாமற்றது எனவும் வாதிட்டார். 

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் பாதிக்கப்பட்டதாக கருதும் நீதிபதிகள் அவர்கள்தான் வழக்குத் தொடர முடியும் எனவும் மற்றவர்கள் வழக்குத் தொடர முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை சுட்டிக் காட்டினர்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றத்தால் திருத்தி அமைக்க முடியாது என்றும் தெரிவித்த நீதிபதிகள், தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் சமமானவர்கள் தான். ஆனால்  நிர்வாக ரீதியில் மட்டுமே ஒருவர் உயர் பதவியான தலைமை நீதிபதி பதவியை வகிக்கிறார். அந்த வகையில் பணியிடம் மாற்றம் செய்யலாம் என அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிபதிகள் விளக்கம் அளித்து, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா இல்லையா எனபது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com