தென்காசி: கிராம வழித்தடங்களில் பேருந்துகள் குறைப்புக்கு மகளிர் இலவச பஸ் காரணமா?ஆட்சியர் விளக்கம்!

மகளிருக்கு இலவச பேருந்து விட்டதன் காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தால் பல கிராமப்புற பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன்.
தென்காசி மாவட்ட ஆட்சியர்
தென்காசி மாவட்ட ஆட்சியர்Facebook
Published on

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா வாடியூரில், மே தின கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிசந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தின்போது மக்கள் அவரிடம் மக்கள் சார்பில் “ஊராட்சி பகுதியில் இயங்கிவரும் 2 டாஸ்மாக் கடைகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை அகற்ற பலமுறை மனு அளித்தும் அகற்றப்படவில்லை. அதில் நடவடிக்கை தேவை.

கிராம சபை கூட்டம்
கிராம சபை கூட்டம்

கடந்த காலங்களில் எங்கள் பகுதி மாணவ, மாணவிகளுக்கு வசதியாக 13ம் எண் கொண்ட பேருந்து இயக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த பேருந்து தற்போது இயக்கப்படாததால் மாணவ மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்து பேசிய மாவட்ட ஆட்சியர், “மகளிருக்கு இலவச பேருந்து அளித்ததன் காரணமாக போக்குவரத்து கழகத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கிராமப்புற பேருந்துகளை அரசு நிறுத்தியுள்ளது. இருப்பினும் இங்கு இந்த பகுதிக்கான பேருந்தை அரசு இயக்க குறித்து வாய்ப்புகளை கேட்டு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள எட்டு தாலுகாக்களில் 73 கடைகள் உள்ளதால் அது அரசு பரிசீலனையில் உள்ளது” என கூறியதாக சொல்லப்படுகிறது. இதில் பேருந்து குறைப்பு குறித்து ஆட்சியர் பேசியது சர்ச்சைக்குள்ளானதை தொடந்து, மாவட்ட ஆட்சியர் துரை டி ரவிசந்திரன் அதற்கு இன்று விளக்கம் அளித்துள்ளார்.

இதுபற்றி புதியதலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ள தென்காசி ஆட்சியர், “2 வருடமாகவே அந்த கிராமத்தில் (வாடியூர்) இலவச பேருந்து போக்குவரத்தில் பிரச்னை இருந்துவருவதாக கிராம சபை கூட்டத்தில் மக்கள் தெரிவித்தனர். சுமார் 4 வழித்தடங்களில் இப்படி இலவச பேருந்துகள் குறைப்பட்டிருப்பதாக தெரிகிறது. அனைத்து குறித்தும் விசாரித்து வருகிறோம். குறிப்பிட்ட இந்த கிராம வழித்தடத்தை பொறுத்தவரை, இங்கு ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் இப்படியான சூழல் ஏற்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. திருநெல்வேலி டிப்போவில் இதுபற்றி பேசியிருக்கிறோம். 15 - 20 நாட்களுக்குள் இவ்விவகாரத்தில் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இவ்விவகாரம் முழுக்க முழுக்க இலவச பேருந்து திட்டத்தை நீட்டிப்பது தொடர்பானதுதான். மற்றபடி பேருந்து சேவை முடக்கம் என அது தவறாக திரித்து கூறப்பட்டுவிட்டது” என்று தெரிவித்தார்.

ஆட்சியர் பேட்டியை இங்கு காண்க:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com