பொங்கல் பண்டிகை - அரசு ஊழியர்களுக்கு தற்காலிக சிறப்பு மிகை ஊதியம்

பொங்கல் பண்டிகை - அரசு ஊழியர்களுக்கு தற்காலிக சிறப்பு மிகை ஊதியம்
பொங்கல் பண்டிகை - அரசு ஊழியர்களுக்கு தற்காலிக சிறப்பு மிகை ஊதியம்
Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சி, டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாடிட ஏதுவாக சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி மன்ற பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படும். திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில், ரூ.3000 என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com