கோயில் நிலங்களை கோயில் அல்லாத பிற பயன்பாட்டிற்கு மாற்றக்கூடாது - உயர்நீதிமன்றம்

கோயில் நிலங்களை கோயில் அல்லாத பிற பயன்பாட்டிற்கு மாற்றக்கூடாது - உயர்நீதிமன்றம்
கோயில் நிலங்களை கோயில் அல்லாத பிற பயன்பாட்டிற்கு மாற்றக்கூடாது -  உயர்நீதிமன்றம்
Published on

இந்துசமய அறநிலையத்துறை கோயில்களின் நிலங்களை கோயில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது என தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சக்தி முத்தம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம், இந்துசமய அறநிலையத்துறையின் அனுமதி இல்லாமல் கடந்த 70 ஆண்டுகளுக்கு முனபு மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் தற்போது மீன்வளத்துறை மூலம் மீன் அங்காடி அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது.


அதேபோல, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு அறநிலையத்துறை அனுமதி இல்லாமல், ஆர்டிஓ அலுவலகம் அமைக்க கொடுக்கப்பட்டது. அறநிலையத்துறை இடங்களை கோயில் பயன்பாட்டிற்கு தவிர மற்றவற்றிற்கு பயன்படுத்துவதை தடுக்கக்கோரி வி.பி.ஆர்.மேனன், ஏ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.


இந்த இரு கோயில்கள் உள்ளிட்ட பல கோயில் நிலங்களின் வழக்குகளில் இன்று நீதிபதி ஆர்.மகாதேவன் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் வழக்கு தொடர்புடைய அறநிலையத்துறை கோயில்களின் நிலங்களை கோயில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது என தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளார். அறநிலையத்துறை கோயில் நிலங்களில் குத்தகைக்கு இருப்பவர்கள், அறநிலையத்துறை நிர்ணயித்த வாடகையை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

கோயில்களின் நிலங்களை கோயில் விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை கோயில்களின் நிலங்களின் உள்ள ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றி, அதுகுறித்த அறிக்கையை ஆணையரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்காக வழக்குகளை 6 மாதத்திற்கு பிறகு ஒத்திவைத்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com