`சாமியை யார் தூக்குவது?’-சலசலப்பை முடிக்க அரங்கநாதர் கோயில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

`சாமியை யார் தூக்குவது?’-சலசலப்பை முடிக்க அரங்கநாதர் கோயில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
`சாமியை யார் தூக்குவது?’-சலசலப்பை முடிக்க அரங்கநாதர் கோயில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
Published on

அரங்கநாதர் திருக்கோவிலில் சாமியை யார் தூக்குவது என்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால், கோவில் நிர்வாகம் `நீங்கள் யாருமே தூக்க வேண்டாம்’ எனக்கூறி இரு தரப்பினருக்கும் தடை விதித்தது. இதனால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே சுமார் 2,000 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு புரட்டாசி மாதம் நவராத்திரியின் பத்தாம் நாள் அன்று அரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்று சாமி வீதி உலா வருவது வழக்கம். கடந்த ஏழு வருடங்களாக இரு தரப்பினரிடையே சாமியார் தூக்குவது என்று பிரச்சனை இருந்து வருகிறது இது சம்பந்தமாக இரு தரப்பினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வைகாசி மாதம் வைகாசி திருவிழாவின்போது ஒரு தரப்பினர் சாமி ஊர்வலம் நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

அதன் அடிப்படையில் ஒரு தரப்பினர் வைகாசி விசாகத்தில் அரங்கநாதரை கருட வாகனத்தில் ஊர்வலமாக தூக்கிச் சென்று கொண்டாடினார்கள். இதனை எதிர்த்து மற்றொரு தரப்பினார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்த நிலையில், இந்த வருடம் புரட்டாசி மாத நவராத்திரி ஆன பத்தாம் நாள் இன்று அரங்கநாதர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வீதி உலா வர தயாராகி வந்தார். இதில் யார் சாமியை தூக்குவது என மீண்டும் இரு தரப்பினரிடையே சாமியை பிரச்னை நிலவியது.

இதனால் மீண்டும் பிரச்னை அதிகரிக்கத் தொடங்கியது. காவல்துறையினர் வந்து, இருதரப்பையும் சமாதானப்படுத்த முயன்றனர். இதனால் அங்கு இருந்த கோவில் நிர்வாகம் `இரு தரப்பினர் சார்பில் யாரும் தூக்க வேண்டாம். கோவில் நிர்வாகம் சார்பில் சுவாமி வீதி உலா வர ஏற்பாடு செய்யப்படுகிறது’ என்றனர்.

மேலும் இறுதி வரை இரு தரப்பினரும் ஒத்துப் போகாததால் கோவில் நிர்வாகம் சார்பில் இந்த வருடம் அம்பு எய்தல், நிகழ்ச்சி மற்றும் சாமி வீதி உலா தடை செய்தது. இதனால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்தனர். இதில் திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாபு மற்றும் மணலூர்பேட்டை உதவி ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணத்தில் இரு தரப்பினரிடையே சமரச பேச்சில் ஈடுபட்டனர். இச்சம்பவங்களால் ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் பரபரப்பாகவே காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com