'தூய்மை பணியாளர் வராவிட்டால் என்னிடம் சொல்லுங்கள்' - கழிவறையை சுத்தம் செய்த எம்எல்ஏ

'தூய்மை பணியாளர் வராவிட்டால் என்னிடம் சொல்லுங்கள்' - கழிவறையை சுத்தம் செய்த எம்எல்ஏ
'தூய்மை பணியாளர் வராவிட்டால் என்னிடம் சொல்லுங்கள்' - கழிவறையை சுத்தம் செய்த எம்எல்ஏ
Published on

தருமபுரியில் அரசு மகளிர் பள்ளியில் ஆய்வுக்குச் சென்ற எம்எல்ஏ கழிவறையை தூய்மை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பள்ளியில் சுகாதார சீர்கேடாக இருப்பதை கண்டறிந்து அப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணம்மாள் உடன் கழிவறை பகுதிக்கு ஆய்வுக்குச் சென்றார்.

அங்கு கழிவறைக்கு வெளியே துர்நாற்றம் வீசியதால் தனது உதவியாளரிடம் தெரிவித்து கழிவறையை தூய்மை செய்யும் பிரஸ், ப்ளீச்சிங். பவுடர். வாங்கி வரச் சொல்லி பள்ளி மேலாண்மை குழு தலைவருடன் கழிவறையை பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் முன்னிலையில் தூய்மை செய்தார்.

தூய்மை செய்துவிட்டு இதைப்போல தான் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏழை மாணவிகள் அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள் அவர்களின் சுகாதாரத்தில் ஆசிரியர்கள் அக்கறை கொள்ள வேண்டும். கழிவறைக்கு பயன்படுத்தப்படும் பெனாயில் போன்றவை இல்லை என்றால் எனக்கு சொல்லுங்கள் நான் வாங்கித் தருகிறேன்.

அதேபோல் தூய்மை பணியாளர்கள் வரவில்லை என்றால் கூறுங்கள் நானே தூய்மையாக்கி விட்டுச் செல்கிறேன் என ஆசிரியர்களிடம் தெரிவித்தார். மேலும் அரசு பள்ளிக்கு ஆய்வுக்காக சென்ற இடத்தில் எம்எல்ஏ, பள்ளி கழிவறையை தூய்மை செய்த சம்பவம், பொதுமக்கள் மற்றும் மாணவிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com