வேண்டாமே செல்ஃபி மோகம்!! கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்; நண்பர்கள் உதவியுடன் மீட்பு

கொடைக்கானலில் பிரபல சுற்றுலாப் பகுதியான டால்பின் நோஸ் பாறையில் இருந்து 100 அடி பள்ளத்தாக்கில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
டால்பின் நோஸ்
டால்பின் நோஸ்pt web
Published on

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதியில் டால்பின் நோஸ் என்னும் சுற்றுலாப் பகுதி உள்ளது. தொடர் விடுமுறை காரணமாக இங்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக காணப்படும் நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர்களும் அங்கு சென்றுள்ளனர். டால்பின் மூக்கு போல நீண்டிருக்கும் ஆபத்தான பாறையின் விளிம்பில் நின்று தன்ராஜ் என்ற இளைஞர் செல்ஃபி எடுக்க முயற்சித்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்தார். தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர் அவரின் நண்பர்களின் உதவியுடன் தன்ராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டால்பின் நோஸ் பாறை பகுதியின் விளிம்பு பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லாத வகையில் தடுப்புகளை அமைக்க கொடைக்கானல் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com