தமிழ்நாட்டில் 4 ஆண்டுகளில் 36,137 இளம்வயது சிறுமிகள் கர்ப்பம்.. RTI மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
ராணிப்பேட்டை செய்தியாளர்
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரும், குழந்தைகள் உரிமைச் செயல்பாட்டாளருமான சி.பிரபாகரன் என்பவர் தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 18 வயது நிரம்பாத இளம்வயது சிறுமிகள் கர்ப்பம் தரிப்பு குறித்த தகவலை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றுள்ளார். அதில் பல்வேறு அதிர்ச்சி கலந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
18 வயதுக்கீழான இளம்வயது சிறுமிகள் திருமண கர்ப்பம் 2021 முதல் 2024 வரையிலான ஆண்டு தரவுகள்.
2021 - 14,031 கர்ப்பம்
2022- 10,901 கர்ப்பம்.
2023- 9,565 கர்ப்பம்.
2024 - ஜனவரி - பிப்ரவரி மட்டும் 1,637 கர்ப்பம்.
மாவட்ட வாரியாக அதிக இளம்வயது திருமண கர்ப்பம் பதிவான முதல் 5 மாவட்டங்கள். ஆண்டுவாரியாக.
2021-ல் சேலம் 859, கிருஷ்ணகிரி 711, திருச்சி -681, மதுரை- 648, திருவள்ளூர் - 591
2022-ல் சேலம் - 661, திருச்சி - 551, திண்டுக்கல் - 513, செங்கல்பட்டு - 508, கோவை - 490,
2023 -ல் திருச்சி - 579, மதுரை - 567, சேலம் - 524, திண்டுக்கல் - 496, ஈரோடு - 431
2024-ல் மதுரை 156, சேலம் - 135, திருச்சி -113, ஈரோடு - 77, சென்னை 49
கோவிட் தொற்று காலமான 2021ல் மட்டும் அதிகப்படியாக 14,031 இளம் வயது சிறுமிகள் திருமண கர்ப்பம் அடைந்ததாகப் பதிவாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டில் 2,179 இளம் வயது சிறுமிகள் திருமண கர்ப்பம் பதிவாகியுள்ளது. இரண்டாவதாக திருச்சியில் 1,924 இளம் சிறுமிகள் திருமணம் நடைபெற்று உள்ளது.
மூன்றாவதாக மதுரை மாவட்டத்தில் 1,371 இளம்வயது சிறுமிகள் திருமண கர்ப்பம் நடைபெற்றுள்ளது. சென்னை பெருநகரத்திலும் 2024 ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் 49 இளம் சிறுமிகள் கர்ப்பம் பதிவாகியுள்ளது.