ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்; காலில் விழுந்து வணங்கிய மாணவிகள்-இது தேர்வு சுவாரஸ்யம்

ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்; காலில் விழுந்து வணங்கிய மாணவிகள்-இது தேர்வு சுவாரஸ்யம்
ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்; காலில் விழுந்து வணங்கிய மாணவிகள்-இது தேர்வு சுவாரஸ்யம்
Published on

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவிகளை ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 192 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 22479 மாணவ மாணவிகள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர் இதற்காக மாவட்டம் முழுவதும் 70 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தேர்வு எழுதும் மாணவிகள் 100 தேர்வில் சதவீத வெற்றி பெற வேண்டும் என மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்கள் சரஸ்வதி படத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து தேர்வு எழுதச் செல்லும் மாணவிகளுக்கு, ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து திலகமிட்டனர்.

இதையடுத்து தேர்வுக்கு செல்லும் முன் மாணவிகள் அனைவரும் தங்களது ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுச் சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com