ரயில்வேயில் வேலைவாங்கித் தருவதாக மோசடி செய்த ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை

ரயில்வேயில் வேலைவாங்கித் தருவதாக மோசடி செய்த ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை
ரயில்வேயில் வேலைவாங்கித் தருவதாக மோசடி செய்த ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை
Published on

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த விவகாரத்தில் உயர்நிலை பள்ளி ஆசிரியருக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் டெக்னீசியனாக பணியாற்றி வந்த ஸ்ரீராமன் என்பவருடன், கிருஷ்ணகிரி மாவட்டம் தோப்பூரில் உள்ள அரசு உயர்நிலை ஆசிரியர் பி.ஆதிமணி என்பவர் சேர்ந்து கடந்த 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் ரயில்வேயில் பொது மேலாளர், கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோர் ஒதுக்கீட்டின்கீழ் வேலை வாங்கித் தருவதாக உத்தரவாதம் அளித்து 26 பேரிடம் 37 லட்ச ரூபாய் அளவிற்கு பெற்றதாகக் கூறப்படுகிறது. வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் இருவரும் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து வந்த புகாரில் விசாரணை நடத்திய சிபிஐ காவல்துறையினர் ஐசிஎஃப் ஸ்ரீராமன், ஆசிரியர் ஆதிமணி ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்து, சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஐசிஎஃப் ஸ்ரீராமன் தலைமறைவானதை தொடர்ந்து ஆசிரியர் ஆதிமணி மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தது நிரூபணம் ஆவதாகக்கூறி ஆசிரியர் ஆதிமணிக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com