சென்னையில் நேற்று டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.33 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழகத்தில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைககளை கடந்த மே 7ஆம் தேதி முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபான கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலமாக சென்னை காவல் எல்லைக்குட்பட்ட 660 கடைகள் மூலம் 20 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது. சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்கள் உள்ளடக்கிய மண்டலத்தில் உள்ள கடைகள் மூலமாக 10 கோடியே 50 லட்ச ரூபாய்க்கும் விற்பனை நடைபெற்று இருக்கிறது.
இதனையடுத்து நேற்று திறக்கப்பட்ட 720 கடைகள் மூலமாக மொத்தமாக ரூ. 33 கோடியே 50 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளது.