தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்திருப்பதாக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமாக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. மதுபானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.
அதன்படி 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட குவார்ட்டர் அளவு மது பாட்டில்களுக்கு 10 ரூபாயும், பீர் பாட்டில்களுக்கு 10 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டது. ஃபுல் விலை ரூ.40 அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.