தஞ்சையின் தாஜ்மஹால்..! முத்தம்மாள் சத்திரத்தை அருங்காட்சியமாக்கும் பணி துவக்கம்!

தஞ்சையின் தாஜ்மஹால்..! முத்தம்மாள் சத்திரத்தை அருங்காட்சியமாக்கும் பணி துவக்கம்!
தஞ்சையின் தாஜ்மஹால்..! முத்தம்மாள் சத்திரத்தை அருங்காட்சியமாக்கும் பணி துவக்கம்!
Published on

தஞ்சையில், இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட முத்தம்மாள் சத்திரத்தை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுத்து அருங்காட்சியமாக மாற்றும் பணி தொடங்கியது.

காதலிக்காக ஷாஜஹான் கட்டிய தாஜ்மகால் காதல் சின்னமாக கொண்டாடப்படுகிறது. தென்னகத்தில், காதலித்த பெண்ணுக்காக இரண்டாம் சரபோஜி மன்னரால்கட்டப்பட்டதுதான் முத்தம்மாள் சத்திரம். தஞ்சையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ஒரத்தநாடு பகுதியில் உள்ளது இந்த பகுதியில் தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட முத்தம்மாள் சத்திரம்.

அரண்மனை அதிகாரியின் சகோதரியான முத்தம்மாளை தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர் காதலித்தார். இத்தம்பதியின் முதல் குழந்தை பிறந்து இறந்த நிலையில், இரண்டாவது குழந்தை இறந்தே பிறந்துள்ளது. அந்த பிரசவத்தில், முத்தம்மாள் காலமானார்.

அப்போது அவர் சரபோஜி மன்னரிடம், தனது பெயரில் கர்ப்பிணிகளுக்காக சத்திரம் கட்டும்படி கேட்டுக்கொண்டதன் பேரில், மன்னர் 1800 ஆம் ஆண்டுகளில் கட்டியதுதான் முத்தம்மாள் சத்திரம். இந்த சத்திரம், தற்போது தொல்லியல் துறை நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போதைய நிலை குறித்து விரிவான வரைபடம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com