520கி.மீ தொலைவில் நிவர் புயல் : மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில்கள் ரத்து

520கி.மீ தொலைவில் நிவர் புயல் : மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில்கள் ரத்து
520கி.மீ தொலைவில் நிவர் புயல் : மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில்கள் ரத்து
Published on

வங்கக் கடலில் நிவர் புயல் உருவாகும் நிலையில் மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிவர் புயல் வரும் 25-ஆம் தேதி தீவிரப்புயலாக மகாபலிபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் முழுவீச்சில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வங்கக் கடலில் நிவர் புயல் உருவாகும் நிலையில் மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் நிவர் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, நிவர் புயலானது சென்னையிலிருந்து 520கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 500 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் புயலானது கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com