‘20 லட்சத்தில் தடுப்பு சுவர்.. 6 மாதத்தில் இடிந்தது’ - கிராம மக்கள் வேதனை

‘20 லட்சத்தில் தடுப்பு சுவர்.. 6 மாதத்தில் இடிந்தது’ - கிராம மக்கள் வேதனை
‘20 லட்சத்தில் தடுப்பு சுவர்.. 6 மாதத்தில் இடிந்தது’ - கிராம மக்கள் வேதனை
Published on

தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டபணிகளில் ரூ 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பாதுகாப்பு சுவர் ஆறு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் மூலம் 2019-20ம் ஆண்டிற்கு குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரும் பணிகள், கட்டுமான பணிகள் மற்றும் புனரமைக்கும் பணிகள் என 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், ஆத்தூர் கிராமம், வெண்ணாறு தொலைகல்லில் 73.500கி.மீட்டரில் பாதுகாப்பு சுவர் கட்டும் பணி ரூ 20 லட்சம் மதிப்பில் நடைபெற்றுள்ளது. வெண்ணாற்றில் கடந்த ஆகஸ்ட் மாதம் தண்ணீர் திறப்பதற்கு முன்பே இப்பணிகள் நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று ஆறுமாதங்கள் கூட முடியாத நிலையில் புதிதாக கட்டப்பட்ட பக்கவாட்டு பாதுகாப்பு சுவர் முற்றிலும் இடிந்து கீழே விழுந்துள்ளது, இதையடுத்து, பொதுப்பணித்துறையினர் ஆற்றின் கரையில் மணல் மூட்டைகளை அடுக்கி நீரை அடைத்து வைத்துள்ளனர். தரமற்ற முறையில் சுவர் கட்டியதாலேயே அது முற்றிலும் இடிந்துள்ளதாகவும், தரமான முறையில் புதிதாக சுவர் அமைத்து தரவேண்டும் எனவும் அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com