மக்களிடையே பீதியை கிளப்பக்கூடாது - தமிழ்நாடு வெதர்மேன்

மக்களிடையே பீதியை கிளப்பக்கூடாது - தமிழ்நாடு வெதர்மேன்
மக்களிடையே பீதியை கிளப்பக்கூடாது - தமிழ்நாடு வெதர்மேன்
Published on

டெல்டா மாவட்டங்கள் உட்பட உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

”உட்பகுதிகளில் ஈரப்பதமான சூழலை உண்டாக்கும் நிகழ்வால் டெல்டா மாவட்டங்கள் உட்பட உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும். இன்று டெல்டா மாவட்டங்களான நாகை,தஞ்சை, திருவாரூர் மாவட்டஙகளில் மழை பெய்து வருகிறது. கடலூர், அரியலூர் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. 

இன்று மாலை விருதுநகர், திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தேனி, நீலகிரி, மதுரை, சிவகங்கை பகுதிகளில் மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களிலும் மழை தொடரும். 

நாளை மழையின் அளவு குறைந்தாலும் தொடர்ந்து பெய்யும். நாளையும் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் மழை பெய்யும். 

டிசம்பர் 1 ஆம் தேதி மழை படிப்படியாக குறையும். சிலர் இந்த மாத இறுதி வரை புயல் இருக்கும் என கணித்து கூறி வருகின்றனர். இது குறைந்த காற்றழுத்தம் கூட கிடையாது. மக்களிடையே பயத்தை பரப்ப கூடாது. வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் மழை இருந்தாலும் இந்த வருடம் சாதாரணமாகவே இருக்கும். இம்மாத இறுதியில் புதிதாக புயல் ஏதும் உருவாக வாய்ப்பில்லை. 

டிசம்பர் 4,5 தேதிகளில் சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்யும். ஆனால் அதுவும் கணிசமான மழை இருக்காது. தற்போது வரை திருத்துறைபூண்டி, திருவாரூரில் 103 மி.மீ மழையும், லோவர் அணைகட்டு தஞ்சாவூரில் 55 மி.மீ மழையும் தஞ்சாவூர் மஞ்சளாறில் 51 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.” என தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com