முதியோர் இல்லங்கள் தொடங்குவதற்காக இந்தியாவில் அளவில் தமிழகத்திலிருந்து தான் அதிகளவு கோரிக்கைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றெடுத்து, வளர்த்து, படிக்க வைத்து, பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டுவந்த பின் ஏதோ சில காரணங்களால் பிள்ளைகளின் கைகளினாளே முதியோர் இல்லங்களில் பெற்றோர்கள் தள்ளப்படும் அவலம் நிகழ்ந்து வருகிறது. பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகளால், தனிமையாக்கப்பட்ட முதியவர்கள் குடும்பங்களை இழந்து மனரீதியான பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் தான் அதிக முதியோர்கள் உள்ளனர் எனவும், முதியோர் இல்லங்கள் தொடங்க இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிக அளவிலான கோரிக்கை விடுத்துள்ளது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மத்திய அரசுக்கு வந்த 325 கோரிக்கைகளில் தமிழக அரசு விடுத்த கோரிக்கைகளின் எண்ணிக்கை 53. இதற்கு காரணம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான முதியவர்கள் இருக்கின்றார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.