பள்ளிகளுக்கு மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வருவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள உத்தரவில், “18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதும், அதற்கு அனுமதி அளிப்பதும் விதிமீறல் மற்றும் சட்டப்படி குற்றம். ஆகவே மாணவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்க பெற்றோர், ஆசிரியர்கள் அனுமதி தரக்கூடாது. பேருந்தில் மாணவர்கள் கூட்டமாக செல்வதை தவிர்க்கும் வகையில், பள்ளி முடிந்த பின்னர் 15 நிமிட இடைவெளியில் மாணவர்களை பிரித்து அனுப்பவும்.
மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த CEO-க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்களை அனுமதிக்கக் கூடாது” எனக் கூறப்பட்டுள்ளது. அனைத்து வகை பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.