கொரோனா பேரிடர்: முதல்வர் நிவாரண நிதிக்கு தமுஎகச ரூ.5 லட்சம் நிதியுதவி

கொரோனா பேரிடர்: முதல்வர் நிவாரண நிதிக்கு தமுஎகச ரூ.5 லட்சம் நிதியுதவி
கொரோனா பேரிடர்: முதல்வர் நிவாரண நிதிக்கு தமுஎகச ரூ.5 லட்சம் நிதியுதவி
Published on

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து ரூ. 5 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளனர்.

கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்ததால் ’பொதுமக்களும் அனைத்து துறையினரும் தாராளமாக நிதி வழங்கவேண்டும்’ என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள், திரைத்துறையினர், தொழில் துறையினர் என பல தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கப் பொதுச்செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, துணைத் தலைவர் நடிகை ரோகிணி, பொருளாளர் ராமச்சந்திரன், மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ராஜ சங்கீதன் ஆகியோர் சந்தித்து கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை வழங்கினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com