ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழரை 5 கி.மீ சுமந்த உறவினர்கள்

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழரை 5 கி.மீ சுமந்த உறவினர்கள்
ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழரை 5 கி.மீ சுமந்த உறவினர்கள்
Published on

செம்மரம் கடத்த முயன்றதாக சுட்டுக்கொல்லப்பட்ட தமிழரின் உடலை அவர்களது உறவினர்கள் 5 கிலோ மீட்டர் சுமந்துச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் கானமலையைச் சேர்ந்த காமராஜ் என்பவர், கடந்த 31ஆம் தேதி செம்மரக்கட்டை கடத்தச்சென்றதாக ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால், மறுஉடற்கூறாய்வு செய்ய வேண்டும் என காமராஜின் உறவினர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. 

இதனையடுத்து ஆந்திரா உயர்நீதிமன்ற உத்தரவுப்படி காமராஜின் உடல், மறுஉடற்கூராய்வு செய்யப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் ஆந்திராவிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சொந்த ஊருக்கு உடல் கொண்டுவரப்பட்டது. ஆனால் கானமலைக்கு செல்ல சாலை வசதியில்லாததால், உறவினர்கள் காமராஜின் உடலை கம்பில் கட்டி 5 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச்சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com