செப் 1 முதல் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்களுக்கு இந்த இலவச பயணம் பொருந்துமென சொல்லப்பட்டுள்ளது. பாஸ் ஏதுமின்றி, அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களும் இப்படி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில், சென்னை போக்குவரத்து கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி நாளை மறுநாள் (செப்.1) பள்ளி (9 முதல் 12 ம் வகுப்பு வரை) கல்லூரிகள் திறக்கப்பட்டு, சுழற்சி முறையில் வகுப்புகள் நடக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க... மகளிருக்கு இலவச பயணம்... ஆண்களுக்கு கூடுதல் கட்டணமா? - ஓபிஎஸ் கேள்வி
அரசுக்கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக் மாணவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவுரைகள் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.