"பாரபட்சமின்றி அமைதியாக தேர்தல் நடத்தப்பட்டது" - தமிழக தேர்‌தல் ஆணையர்

"பாரபட்சமின்றி அமைதியாக தேர்தல் நடத்தப்பட்டது" - தமிழக தேர்‌தல் ஆணையர்
"பாரபட்சமின்றி அமைதியாக தேர்தல் நடத்தப்பட்டது" - தமிழக தேர்‌தல் ஆணையர்
Published on

எதிர்க்கட்சிகள் அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக, அமைதியான முறையில் நடத்தி முடிக்கப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டி‌ல், மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்‌த அவர், முந்தைய தேர்தல்களை விட மிக அமைதியான முறையில் இரு கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பாரபட்சமின்றி நடத்தப்பட்டதாகக் கூறினார். பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரகப்பகுதிகளுக்கும் விரைவில் வார்டு மறுவரையறை முடித்து தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் ‌தெரிவித்தார்.

அதேபோல், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு தேர்தல் விரைவில் நடத்தப்படும் எனக்கூறிய பழனிசாமி, 25 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும். 3 வேட்பாளர்கள் உயிரிழந்ததால் அவர்கள் போட்டியிட்ட இடங்களில் மறுதேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

91 ஆயிரத்‌து 975 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சில இடங்களில் வேட்பாளர்களின் இறப்பு காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் 99.9 சதவீத முடிவுகள் வெளியிடப்பட்டு, சான்றிதழ்களும் வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com