மீனவர்கள் விவகாரத்தில் தலையிடுங்கள்: மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை

மீனவர்கள் விவகாரத்தில் தலையிடுங்கள்: மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை
மீனவர்கள் விவகாரத்தில் தலையிடுங்கள்: மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை
Published on

தமிழக மீனவர்கள் தொடர்பான பிரச்சனையில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை தாக்குதல் நடத்தியதோடு துப்பாக்கிச் சூடும் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சொந்த நாட்டு மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியது வேதனை அளிப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், மீனவர்களை தடிகளாலும், இரும்புக் கம்பிகளாலும் கடலோரக் காவல் படையினர் தாக்கி உள்ளனர், துரதிருஷ்டவசமாக இதுபோன்ற சம்பவங்கள் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com