சிறுபான்மையினருக்கு குரல் கொடுக்கக்கூடிய ஒரே இயக்கம் திமுகதான்: பொன்முடி

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கும் நிலையில் பெரும்பான்மையான கட்சிகள் கூட்டணியையும் தொகுதிப்பங்கீட்டினையும் இறுதி செய்து பிரச்சாரத்தில் இறங்கிவிட்டன. அந்த வகையில், திமுகவும் உரிமையை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் கூட்டங்கள் நடத்தி வருகிறது.
cm mkstalin and ponmudy
cm mkstalin and ponmudypt
Published on

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் குழுக்களையும் கட்சிகள் அறிவித்துள்ளன. அதன்படி திமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க, தேர்தல் ஒருங்கிணைப்புக்கென தனித்தனியாக குழுக்களை அமைத்துள்ளது. திமுக எம்.பி.யும் துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி தலைமையிலான நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, மாவட்ட வாரியாக மக்களைச் சந்தித்து அறிக்கைகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துக்கள்’ எனும் தலைப்பில் பல்வேறு தரப்பினரது கருத்துக்களை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கேட்டு வருகிறது.

அதேபோல் தமிழகம் முழுவதும், ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ எனும் பெயரில் திமுக அறிவித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்கான பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. நேற்று, இன்று மற்றும் நாளை இவை நடைபெறுகின்றன.

இந்த நிலையில், “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” “பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்” என்ற தலைப்பில் கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பரப்புரை கூட்டம், அந்த மாவட்ட கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பாசிசம் சரிய தொடங்குவதற்கு காரணம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். திராவிட மாடல் அரசின் 33 மாதங்களில் 1,339 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அதிமுக அடகு வைத்து விட்டது. இருப்பினும் மாநில உரிமைகளை மீட்டெடுக்க முதல்வர் அழைக்கிறார். ஆனால், அவர்கள் துணிந்து வராமல், தங்கள் மீது வழக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் தனது சக்திக்கு மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கலைஞர் உரிமைத்தொகை திட்டம் மூலம் 1,15,00,000 பெண்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் பெறுகின்றனர். நாங்கள் சொன்னது போல 1000 ரூபாய் கொடுத்துவிட்டோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு சொன்ன 15 லட்சம் கொடுத்தார்களா? அதனை வாக்கு கேட்க வரும்போது உரிமையுடன் கேளுங்கள். இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்களுக்கு மட்டுமில்லை வருங்காலங்களில் தமிழர்களாக நாமும் பாதிக்கக்கூடிய வகையில் சி.ஐ.ஏ, சட்டம் இருக்கும். அவ்வளவு ஏன் மகளிர் உரிமைத்தொகை பறிபோகும் நிலை உருவாகும்” என்றார்.

cm mkstalin and ponmudy
விவசாயி மகன் - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்.. யார் இந்த செல்வப் பெருந்தகை?

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி” நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி கலந்து கொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர், “‘இந்தியா’ கூட்டணி அமைய காரணமாக இருந்தவர் தமிழக முதலமைச்சர்தான். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது நமக்கு தேவையா ‘ஒரே ஜாதி ஒரே மதம்’ என்று சொல்ல பாஜகவிற்கு துணிச்சல் இருக்கிறதா. நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 441 சட்டமன்ற உறுப்பினர்களை காசு கொடுத்து வாங்கிய அரசுதான், ஒன்றிய பாஜக அரசு. எல்லோரும் சமம் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே திராவிட இயக்கம்.

பல்வேறு திட்டங்களுக்கு தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருக்கிறது. விவசாயிகளுக்கு விரோதம், தொழிலாளர்களுக்கு விரோதம், தொழில் நிறுவனங்களுக்கு விரோதம் என பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பாஜக கூட்டணியில் இருந்து அனைத்து சட்டங்களையும் ஆதரித்து விட்டு தற்போது வெளியே வந்துள்ள அதிமுக, சிறுபான்மையினரின் வாக்குகளை வாங்க வருகிறது. சிறுபான்மையினருக்கு குரல் கொடுக்கக்கூடிய ஒரே இயக்கம் திமுகதான்” என்றார்.

இதுபோன்று நாளையும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் உரிமையை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com