மணல் குவாரிகளை திறப்பதற்கான டெண்டர் நாளை கோரப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் பொதுநல வழக்குகள் போடப்பட்டதால் நீதிமன்றம் மணல் குவாரிகளுக்கு தடை விதித்ததாகவும், தற்போது தடை நீங்கி உள்ளதால் குவாரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் புதிய மணல் குவாரிகள் திறக்கப்பட உள்ளதாகவும், மணல் குவாரிகளுக்கான டெண்டர் நாளை கோரப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் அரசே விற்பனை செய்யும் என்றும் கூறினார். இதனால் மணல் விலை படிப்படியாக குறையும் என கூறப்படுகிறது.