110ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை என்ன?... முதலமைச்சர் விளக்கம்

110ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை என்ன?... முதலமைச்சர் விளக்கம்
110ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை என்ன?... முதலமைச்சர் விளக்கம்
Published on

தமிழக சட்டப்பேரவையில், சட்டமன்ற விதி எண் 110ன்கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
 
விதி எண் 110ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் எந்தெந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. எந்தெந்த திட்டங்கள் நிலுவையில் உள்ளது என்று அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட மொத்தம் 879 அறிவிப்புகளில் 872 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார். மீதமுள்ள அறிவிப்புகளுக்கான ஆயத்தப்பணிகள் முடிவடைந்த பின்னர், அரசாணை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 557 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். அதில், 315 அறிவிப்புகளுக்கான திட்டப்பணிகளில் பெரும்பாலானவை முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும் தெரிவித்தார். 2016 - 17 ஆம் ஆண்டு விதி 110ன் கீழ் முதலமைச்சரால் 175 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பழனிசாமி, அதில், 167 அரசாணைகள் வெளியிடப்பட்டு, அப்பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு 20 பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டதாக கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com