பாரதிய ஜனதா கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார்.
குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து அதிமுக அலுவலகத்தில் நேற்று அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரியதால் பாரதிய ஜனதா வேட்பாளருக்கு அதிமுக அம்மா அணி ஆதரவளிக்கும் என்றார். இதனை தொடர்ந்து பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு நேரில் ஆதரவு தெரிவிப்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற பின் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது இது மூன்றாவது முறையாகும்.