தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 28-ம் தேதி வெளிநாடு செல்ல உள்ள நிலையில், இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தற்போது தொடங்கியுள்ள இந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
காரணம் இதில் ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய முதலீடுகள் தீர்க்கப்பட உள்ளன. மேலும் இங்கு வரவுள்ள தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இத்தோடு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் அதே போல கொள்கை ரீதியான முடிவுகள் எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
தொடர்ந்து பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டமன்றம் கூடுகிறது. அதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது