பட்ஜெட் 2016-17: எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

பட்ஜெட் 2016-17: எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
பட்ஜெட் 2016-17: எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
Published on

தமிழக பட்ஜெட்டில் எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய விரிவான விபரம்:

விவசாயம்:

- வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட கூடுதலாக 500 மையங்கள் அமைக்கப்படும்

- விதை உற்பத்தியை வலுப்படுத்த ரூ.50 கோடியில் திட்டம்

- கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7000 பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை

- பயிர்காப்பீட்டு மானிய திட்டத்திற்கு ரூ.522 கோடி நிதி ஒதுக்கீடு

- உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலிந்தோர் நிவாரண உதவி ரூ.20,000 ஆக உயர்வு

- சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழு ஏற்படுத்தப்படும்

- 2017-2018 இல் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.7000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு

மாணவர்களுக்கான திட்டங்கள்:

- பள்ளிக்கல்விக்கு 26,932 கோடி ஒதுக்கீடு

- இலவச மடிக்கணினி திட்டத்திற்கு ரூ. 758 கோடி நிதி ஒதுக்கீடு

- ஜவ்வாது மலையில் 2 உண்டு உறைவிட மாதிரிப்பள்ளிகள் அமைக்கப்படும்

- மருத்துவ கல்விக்கான பட்டமேற்படிப்பு இடங்கள் 1,188 லிருந்து 1,362 உயர்த்தப்பட்டுள்ளது

- 150 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக உயர்த்தப்படும்

- பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவசத் திட்டங்களுக்கு ரூ. 1503 கோடி ஒதுக்கீடு

- பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூ. 755லிருந்து ரூ.900 ஆக உயர்வு

- கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூ.875லிருந்து ரூ.1000 ஆக உயர்வு

மீன்வளத்துறை:

- ஒதுக்கீடு : ரூ.768 கோடி

- மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.5000 வழங்கப்படும்

- ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்

- மீனவர்களுக்கு ரூ.85 கோடி செலவில் 5,000 வீடுகளைக் கட்டித் தரப்படும்.

- மீனவர்களுக்கான நிவாரண உதவித்தொகை ரூ.4,500 ஆக உயர்த்தப்படும்.

- இயந்திர மீன்பிடி படகுகளுக்கான டீசல் 15,000 லிருந்து 18,000 லிட்டராக உயர்வு

நெடுஞ்சாலை துறை:

- ரூ.10,067 கோடி நிதி ஒதுக்கீடு

- சாலைகள் அகலப்படுத்தும் பணி, புதிய பாலங்கள் கட்ட ரூ. 3,100 கோடி ஒதுக்கீடு

- சென்னை, புறநகர் சாலைத் திட்டங்களுக்கு ரூ.744 கோடி

- 2017-2018ல் சாலை பாதுகாப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

- ரூ.1,508 கோடி செலவில் நான்கு வழிச்சாலைகள் தரம் உயர்த்தப்படும்

- போக்குவரத்து துறைக்கு மொத்தம் ரூ.2,192 கோடி ஒதுக்கீடு

நீர் வளம்:

-நீர்வள ஆதாரங்கள் துறைக்கு மொத்தம் ரூ. 4,500 கோடி

- பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

- வறட்சியை சமாளிக்க புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும்

- உலக வங்கி கடனுதவியுடன் ரூ 3,042 கோடியில் நீர், நில வளத்திற்கு திட்டம் செயல்படுத்தப்படும்

- அவினாசி அத்திக்கடவு திட்டத்திற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு

- தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு

மின்சாரம்- எரிசக்தித் துறை:

- ரூ.16,998 கோடி ஒதுக்கீடு

- உபரி காற்றாலை மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு கொண்டுசெல்ல சிறப்பு வழித்தடம்

- ஸ்ரீ பெரும்புதூரில் மின்னணு பொருள் உற்பத்தி மையம் ஏற்படுத்தப்படும்

இளைஞர்களுக்கான திட்டம்:

- ரூ.150 கோடி செலவில் கோவை, திருச்சி, மதுரையில் உள்ள ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி

- இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ. 165 கோடி நிதி ஒதுக்கீடு

காவல்துறை:

- காவல்துறையினர் வீட்டு வசதிக்கு ரூ. 450 கோடி ஒதுக்கீடு

உள்ளாட்சி , நகராட்சி:

- நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.13, 996 கோடி ஒதுக்கீடு

- உள்ளாட்சித் தேர்தல் நடத்த ரூ.174 கோடி நிதி ஒதுக்கீடு

- புதிதாக 10 வட்டாட்சியர் அலுவலகங்கள், 5 கோட்டாட்சியர் அலுவலகங்கள் அமைக்கப்படும்

- திறன்மிகு நகரங்கள் திட்டத்துக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு

- பிரதம மந்திரி கிராமப்புற சாலைத் திட்டத்திற்கு ரூ. 758 கோடி ஒதுக்கீடு

- அட்டல் நகர்ப்புற புத்துணர்வு திட்டத்துக்கு ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடு

பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் :

- பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.265 கோடி நிதி ஒதுக்கீடு

- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.988 கோடி நிதி ஒதுக்கீடு

- ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.3,009 கோடி நிதி ஒதுக்கீடு

கால்நடை பராமரிப்பு:

- ரூ.1,161 கோடி நிதி ஒதுக்கீடு

- கோழிப்பண்ணை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு

- காங்கேயம், பர்கூர் உள்ளிட்ட நாட்டுமாடுகளை பாதுகாக்க அரசு நிதிஉதவி வழங்கும்

- 2017-2018ல் ஏழைகளுக்கு 12,000 பசுக்கள், 6 லட்சம் ஆடுகள் வழங்கப்படும்.

தொழில்நுட்பம்:

- தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதி ரூ.1,00,300 கோடியை எட்டும்

- தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.116 கோடி நிதி ஒதுக்கீடு.

தொழிலாளர் நலம்

- தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,010 கோடி நிதி ஒதுக்கீடு

- பிற மாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு வாடகை குடியிருப்புகள் அமைக்கப்படும்

- ஓய்வூதியம், ஓய்வுகால பலன்களுக்காக பட்ஜெட்டில் ரூ.22,394 கோடி நிதி ஒதுக்கீடு

- சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ. 3,790 கோடி

மருத்துவம் மற்றும் சுகாதாரம்:

- ரூ.43.76 கோடியில் 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்

- குறைந்த விலையிலான பொது மருந்து விற்பனை கடைகள் அமைக்கப்படும்.

- பிறந்த குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டை கண்டறிய சென்னை, சிவகங்கையில் முன்னோடித் திட்டம்

- சிறப்பு சிகிச்சைகளுக்கான காப்பீடு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

- 12 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்

- காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.130 கோடியில் 330 ஏக்கரில் மருத்துவ பூங்கா அமைக்கப்படும்

- மகப்பேறு உதவித்திட்டத்திற்கான நிதியுதவி ரூ.12,000லிருந்து ரூ.18,000 ஆக உயர்வு.

- முதலமைச்சரின் காப்பீடு திட்டத்திற்கு ரூ. 1,348 கோடி ஒதுக்கீடு

- தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 50 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்படும்

- மக்கள் நல்வாழ்வு, குடும்பநலத்துறைக்கு ரூ. 10,158 கோடி ஒதுக்கீடு மற்றும்

தொழில்துறை:

- தொழில் தொடங்க தேவையான ஒற்றைச் சாளரமுறை மேலும் வலுப்படுத்தப்படும்

- உலக முதலீட்டாளர் மாநாட்டை இந்தாண்டு நடத்த ரூ.75 கோடி

- தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவை 34 லட்சம் ஏக்கரிலிருந்து 39 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்

- காஞ்சிபுரம், கரூர் மாவட்டத்தில் தலா ஒரு ஜவுளி குழுமம் அமைக்கப்படும்

- ராமேஸ்வரத்தில் கடல் உணவுப்பொருள் குழுமம் அமைக்கப்படும்

- மூலதன மானியம், குறைந்த வட்டியில் கடன் வழங்க தொழில்துறைக்கு ரூ. 1,950 கோடி நிதி

- தருமபுரியில் உணவுப்பொருள் குழுமம் அமைக்கப்படும்

- ஈரோடு, பூதலூர், நெகமத்தில் ரூ. 22 கோடியில் தென்னை நார் கயிறு குழுமங்கள் அமைக்கப்படும்

- சிறு, குறு நடுத்தர தொழில் மானிய ஒதுக்கீடு ரூ.80 கோடியிலிருந்து ரூ.160 கோடியாக உயர்வு.

வீட்டுவசதி திட்டம்:

- பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் ரூ.1.70 லட்சம் மதிப்பில் 1.76 லட்சம் வீடுகள் கட்டப்படும்

- பசுமை வீடுகள் திட்டத்தில் ரூ.420 கோடியில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்

- குடிசை மாற்றுவாரிய பழைய குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்படும்

பெண்களுக்கான திட்டம்:

- உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ. 20,000 க்கு மிகாமல் 50% மானியம்

- 1 லட்சம் பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு

- சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்துக்கு ரூ.61 கோடி ஒதுக்கீடு.

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டம்:

- மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 1,00௦ லிருந்து 2,000 ஆக உயர்வு

மற்றவை:

- மெட்ரோ ரயில் திட்டம் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை விரிவுப்படுத்தப்படும்.

- 1000 கிராமப்புற கோயில்களை புதுப்பிக்க தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்

- 2017-2018 இல் உணவு மானியத்திற்கு ரூ. 5,500 கோடி ஒதுக்கீடு

- இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு ரூ. 490 கோடி நிதி ஒதுக்கீடு

நிதி நிலைமை:

- நிதிமாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடி

- 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதி பற்றாக்குறை ரூ. 41,977 கோடி

- 2017-18 ல் வருவாய் பற்றாக்குறை ரூ.15,930 கோடியாக இருக்கும்

- தமிழக பொருளாதார வளர்ச்சி 6.5% இல் இருந்து 7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com