விரைவுச் செய்திகள்: பள்ளி, கல்லூரிகள் திறப்பு | 30 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கம்

விரைவுச் செய்திகள்: பள்ளி, கல்லூரிகள் திறப்பு | 30 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கம்
விரைவுச் செய்திகள்: பள்ளி, கல்லூரிகள் திறப்பு | 30 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கம்
Published on

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா தடுப்புக்கான கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. பெற்றோர், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என தமிழக அரசு உறுதியளித்திருக்கிறது.

பள்ளிகள் மீண்டும் திறப்பு - மாணவர்கள் மகிழ்ச்சி: பல மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவியர் மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்கள் முகக் கவசம், தனி நபர் இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பேருந்துகளிலும் விதிகளை பின்பற்ற வேண்டும்: பஸ் பாஸ் இல்லாவிட்டாலும் சீருடை அணிந்திருந்தாலே அரசுப் பேருந்துகளில் மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளிலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கல்லூரிகளும் திறப்பு: தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளும் திறக்கப்பட்டது. சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி முகாம்: மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிகளிலேயே கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்திருக்கிறார்.

புதுச்சேரியில் சுழற்சி முறையில் வகுப்புகள்: புதுச்சேரி மாநிலத்திலும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 10 மற்றும் 12க்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் மனைவி காலமானார்: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

சிலிண்டர் விலை ரூ.900ஆக உயர்வு: தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மேலும் 25 ரூபாய் உயர்ந்து 900- ஐ கடந்தது. கடந்த ஓராண்டில் மட்டும் 285 ரூபாய் அதிகரித்திருக்கிறது.

மலையூர் கிராமத்துக்கு சாலை வசதி - ஆட்சியர் உறுதி: புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டம், மலையூர் கிராமத்துக்கு சாலை வசதி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் விசாகன் உறுதியளித்திருக்கிறார்.

30 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கம்: புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கைபடி அறிக்கையை வெளியிட்டது வாட்ஸ் அப். இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 30 லட்சம் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கு - 6 லட்சம் பேர் தவிப்பு: அசாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காஸிரங்கா தேசிய பூங்கா நீரில் மூழ்குவதால் விலங்குகள் தவித்துவருகிறது.

மாரியப்பனுக்கு வாழ்த்து மழை - ரூ.2 கோடி பரிசு: பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இரண்டாவது முறையாக பதக்கம் வென்று தமிழக வீரர் மாரியப்பன் அசத்தியிருக்கிறார். வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் ஊக்கப்பரிசு அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தலிபான்களுடன் இந்தியா பேச்சு: தலிபான் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரை கத்தார் நாட்டுக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் சந்தித்தார். ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்க மாட்டோம் என தலிபான்கள் உறுதியளித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

போரை முடித்தது சரியான சிறந்த முடிவு: 20 ஆண்டுகால போருக்கு பின்னர் ஆப்கான் மண்ணில் இருந்து கடைசி அமெரிக்க வீரரும் வெளியேறினார். போரை முடித்துக்கொண்டது சரியான சிறந்த முடிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களிடையே ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

யூ.எஸ். ஓபன் -ஸ்வரேவ் வெற்றி: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 2-வது சுற்றுக்கு முன்னேறினார் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ். பெண்கள் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஸ்லி பார்டி வெற்றி பெற்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com