விரைவுச் செய்திகள்: ரவுடியால் சுடப்பட்ட எஸ்ஐ | தடுப்பூசி உற்பத்தி | மணிகண்டன் முன் ஜாமீன்

விரைவுச் செய்திகள்: ரவுடியால் சுடப்பட்ட எஸ்ஐ | தடுப்பூசி உற்பத்தி | மணிகண்டன் முன் ஜாமீன்
விரைவுச் செய்திகள்: ரவுடியால் சுடப்பட்ட எஸ்ஐ | தடுப்பூசி உற்பத்தி | மணிகண்டன் முன் ஜாமீன்
Published on

தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட 35,000 கோடி ரூபாய் செலவிடப்பட்ட விவரம் என்ன? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாளை முதல் ரூ.2,000, 14 மளிகைப் பொருட்கள்: கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை 2000 ரூபாய் வழங்குவதை நாளை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 14 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டமும் தொடங்கப்படுகிறது.

பைக் சாகசம் - இளைஞர்கள் அடாவடி: சென்னை வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசத்தில் இளைஞர்கள் ஈடுபட்டனர். ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்டதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

எஸ்ஐ-யை சுட்ட ரவுடி - காவல்துறை விசாரணை: தலைமறைவு குற்றவாளியை பிடிக்கச்சென்ற எஸ்ஐ-யை நோக்கி ரவுடி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த எஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரவுடியைப் பிடித்து காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அத்தியாவசிய கடைகள் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

தடுப்பூசி உற்பத்தி - 45 நிறுவனங்கள் விருப்பம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் தயாரிக்க 45 நிறுவனங்கள் விருப்பம் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தொழில்துறையின் கீழ் இயங்கும் டிட்கோ மூலம் தொழில் தொடங்க முன்வருவோருக்கு உதவி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

+2 பொதுத்தேர்வு ரத்தா? - ஓரிரு நாளில் முடிவு: தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்?: சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வை ரத்து செய்த மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யுமா? என கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குஜராத், ம.பி.யில் +2 பொதுத்தேர்வுகள் ரத்து: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக குஜராத், மத்தியப்பிரதேச மாநில அரசுகள் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாநில அரசுகளும் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

3 பாஜக எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்: புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர்கள் அமர்த்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நியமனம் செல்லும் என்று கூறி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்ஜாமீன் கோரினார் முன்னாள் அமைச்சர்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரில் காவல்துறை தேடும் நிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படவில்லை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருவதாகவும் நம்பிக்கை அளித்துள்ளார்.

நாங்கள் சமூகவலைதளம் அல்ல; தேடுபொறிதான்: நாங்கள் சமூக வலைதளம் இல்லை; வெறும் தேடுபொறிதான் என்பதால் புதிய விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூகுள் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com