விரைவு செய்திகள்: தடுப்பூசிக்கு இளைஞர்கள் ஆர்வம் | ஆன்லைன் வகுப்பு | தினசரி கொரோனா

விரைவு செய்திகள்: தடுப்பூசிக்கு இளைஞர்கள் ஆர்வம் | ஆன்லைன் வகுப்பு | தினசரி கொரோனா
விரைவு செய்திகள்: தடுப்பூசிக்கு இளைஞர்கள் ஆர்வம் | ஆன்லைன் வகுப்பு | தினசரி கொரோனா
Published on

காவிரியின் குறுக்கே மேகதாது அணை அனுமதியின்றி கட்டப்படுகிறதா என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு, கர்நாடகா மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

'ட்ரோன்' கேமிரா மூலம் கண்காணிப்பு: முழு ஊரடங்கிலும் வெளியே சுற்றித்திரியும் பொதுமக்களை ட்ரோன் கேமிரா மூலம் காவல்துறை கண்காணித்து எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள இளைஞர்கள் ஆர்வம்: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் சென்னை, திருச்சி, கன்னியாகுமரியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. முகாம்களில் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இளைஞர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

மாநிலங்களுக்கு நேரடியாக ஸ்புட்னிக் வி தடுப்பூசி?: இந்தியாவில் மாநில அரசுகள் கோரிய ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை விநியோகிப்பது குறித்து பரிசீலிப்பதாக ரஷ்ய தூதர் தகவல் தெரிவித்துள்ளார். ஃபைசர், மாடர்னா நிறுவனங்கள் நேரடியாக மத்திய அரசுடன்தான் பேசுவோம் என கூறிய நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

10 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பு: யாஸ் புயல் நாளை கரையை கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற செய்யப்பட்டுள்ளனர்.

தடையின்றி பொருள்கள் - முதல்வர் அறிவுறுத்தல்: ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

4,900 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனை: முழு ஊரடங்கின் முதல் நாளில் நடமாடும் வாகனங்கள் மூலம் 4,900 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நகர்ப்பகுதி மட்டுமல்லாமல், கிராம பகுதிகளிலும் விநியோகம் செய்யப்படுவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பள்ளி முதல்வர் விசாரணைக்கு ஆஜர்: சென்னையில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளியின் முதல்வர், தாளாளர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

ஆன்லைன் வகுப்பு - ஆசிரியர்களுக்கு கடும் கட்டுப்பாடு: சென்னையில் பள்ளி ஆசிரியர் ஆபாசமாக நடந்துகொண்ட சம்பவத்தையடுத்து ஆன்லைன் வகுப்புக்கான விதிகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழுவையும் ஏற்படுத்த இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரசின் விதிகளை பின்பற்றுவோம் - ஃபேஸ்புக்: அரசு கொண்டு வந்த புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றப்போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களுக்கான புதிய விதிகள் நாளைமுதல் நடைமுறைக்கு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினசரி தொற்றுகள் - உயிரிழப்புகள் கணிசமாக சரிவு: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்திற்கு கீழ் குறைந்தது. அன்றாட உயிரிழப்புகளும் 3,511 ஆக குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com