அங்கீகாரம் இல்லாத தொடக்கப் பள்ளிகளை மூட வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மீறி செயல்பட்டால் வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலரே பொறுப்பு என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கூடுதல் தளர்வுகளுக்கு வாய்ப்பு: ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உயரதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட வாய்ப்பு மற்றும் மதுக்கடைகள் திறக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
வெல்லம் சப்ளை செய்வது யார்? - கண்டறிய உத்தரவு: கள்ளச்சாராயம் தயாரிப்போருக்கு வெல்லத்தை சப்ளை செய்வது யார்? என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு கூடுதல் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
நெல்மூட்டைகள் மழையில் நனைவதை தடுக்க உத்தரவு: கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனப் பரப்பை அதிகரித்து உத்தரவு: கோவை மாவட்ட வனப்பகுதியில் கூடுதலாக ஆயிரத்து 49 ஹெக்டேர் நிலம் சேர்க்கப்பட்டுள்ளது. யானைகள் இடப்பெயர்ச்சிக்கு பிரச்னையாக இருந்த கல்லார் வழிதடத் பகுதி தனியார் வனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நகை, பணம் திருட்டு - 3 காவலர்கள் கைது: வேலூர் அருகே சாராய வேட்டைக்கு சென்ற இடத்தில் நகைகள் மற்றும் பணத்தை திருடியதாக 3 போலீஸார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலை. மறுதேர்வு அட்டவணை வெளியீடு: அண்ணா பல்கலை. பொறியியல் மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் தேதிகள் அடங்கிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆன்லைனில் நடந்த தேர்வில் அதிகளவு மாணவர்கள் தேர்ச்சி பெறாத நிலையில் மறுதேர்வு நடைபெறவுள்ளது.
திங்கள் முதல் 50% ஊழியர்களுடன் பணி: திங்கள் முதல் 50% பணியாளர்களுடன் நீதிமன்றங்கள் செயல்படும் என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.
நீடிக்கும் கனமழையால் பாதிப்பு: மகாராஷ்ராவில் நீடிக்கும் கனமழையால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்புப்பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக்குழு செல்கிறது.
அமெரிக்கா, ஜப்பானில் தெரிந்த சூரிய கிரகணம்: அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சூரிய கிரகணம் தென்பட்டது. தொலைநோக்கி வழியாக பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.