விரைவுச் செய்திகள்: சென்னையில் குடியரசுத் தலைவர் | 100 மீ. ஓட்டம் - இத்தாலி சாம்பியன்

விரைவுச் செய்திகள்: சென்னையில் குடியரசுத் தலைவர் | 100 மீ. ஓட்டம் - இத்தாலி சாம்பியன்
விரைவுச் செய்திகள்: சென்னையில் குடியரசுத் தலைவர் | 100 மீ. ஓட்டம் - இத்தாலி சாம்பியன்
Published on

சென்னையில் குடியரசுத் தலைவர்: சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் சென்னை வருகை புரிந்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.

பாதுகாப்பு பணியில் 5,000 காவல்துறையினர்: குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செல்லும் வழித் தடங்கள் அனைத்திலும் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கருணாநிதி படத்திறப்பு விழா - அதிமுக பங்கேற்கவில்லை: சட்டப்பேரவையில் நடைபெறும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்திருக்கிறார்.

10வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்: எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருவதால் 10வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.

வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ரத்து செய்த பிரிவில் வழக்கு - உச்சநீதிமன்றம் நோட்டீஸ்: ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ-வில் வழக்குப்பதிவு செய்வதை எதிர்த்த வழக்கில் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் கலைச்செல்வன் என்ற மீனவரின் தலையில் குண்டுபாய்ந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

கிராம சபை கூட்டத்துக்கு அனுமதி கோரி கமல் மனு: ஆகஸ்ட் 15ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதிக்க கோவை மாவட்ட ஆட்சியரிடம் கமல்ஹாசன் மனு அளித்திருக்கிறார்.

3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது: பாலியல் புகாரில் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மூன்றாவது போக்சோ வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்திருக்கின்றனர்.

வனத்துக்குள் விடப்பட்ட ரிவால்டோ: நீலகிரி மாவட்டத்தில் பிடிபட்ட ரிவால்டோ யானை திடீரென வனப்பகுதியில் விடப்பட்டது. சாஃப்ட் ரீலிஸ் முறையை கைவிட்டது வனத்துறை.

100 மீ. ஓட்டம் - இத்தாலியின் ஜேக்கப்ஸ் சாம்பியன்: ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் இத்தாலி வீரர் மார்சல் ஜேக்கப்ஸ். பந்தய இலக்கை 9 புள்ளி எட்டு பூஜ்ஜியம் நொடிகளில் எட்டி உலகின் அதிவேக மனிதரானார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com