விரைவுச் செய்திகள்: +2 பொதுத் தேர்வு| வைகை அணை திறப்பு | கொரோனா சிகிச்சை புதிய விதிமுறைகள்

விரைவுச் செய்திகள்: +2 பொதுத் தேர்வு| வைகை அணை திறப்பு | கொரோனா சிகிச்சை புதிய விதிமுறைகள்
விரைவுச் செய்திகள்: +2 பொதுத் தேர்வு| வைகை அணை திறப்பு | கொரோனா சிகிச்சை புதிய விதிமுறைகள்
Published on

சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு எப்போது?: சிபிஎஸ்இ தேர்வு அறிவிப்புக்குப் பிறகே தமிழகத்தில் +2 தேர்வுத் தேதி குறித்து முடிவெடுக்கப்படும் என முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தியபிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் மளிகைப்பொருள் கிடைப்பதில் சிக்கல்: கிராமப்புறங்களிலும் மளிகைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'வாட்ஸ் அப்'பில் மது விற்பனை-அட்மின் கைது: திருப்பத்தூர் மாவட்டத்தில் வாட்ஸ் அப் மூலம் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்ற சம்பவத்தில் வாட்ஸ் அப் குழுவின் அட்மின் உட்பட இருவரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.

பள்ளிகள் திறப்பு எப்போது?: தளர்வில்லா ஊரடங்கு முடிந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என தொடக்க கல்வி இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

ஜூன் 4ல் வைகை, பேச்சிப்பாறை அணைகள் திறப்பு: ஜூன் 4ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு வைகை அணையை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருக்கலைப்பு செய்த மருத்துவரிடம் விசாரணை: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை அளித்த பாலியல் புகார் குறித்து கருக்கலைப்பு செய்த மருத்துவரிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.

ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி - முதல்வர்: மக்கள் ஒத்துழைத்தால் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் உறுதியளித்துள்ளார்.

'2 DG' மருந்து யாருக்கு தரலாம்?: தண்ணீரில் கலந்து குடிக்கும் 2 டிஜி மருந்தை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கக் கூடாது என புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினசரி பாதிப்பு 1.5 லட்சத்துக்கு கீழ் சரிந்தது: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 27ஆயிரமாக சரிந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 43 நாட்களுக்குப் பிறகு 20 லட்சத்திற்கு கீழ் குறைந்தது.

கொரோனா சிகிச்சை - புதிய விதிமுறைகள்: கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் ஆக்சிஜன் அளவு 94க்கு மேல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்க தேவையில்லை என சிகிச்சை தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக மருத்துவத்துறை கூறியுள்ளது.

டெல்லியில் மதுபானங்கள் 'டோர் டெலிவரி': தலைநகர் டெல்லியில் மதுபானங்களை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் இந்திய மற்றும் வெளிநாட்டு மதுபானங்களை பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனாவின் பெயர் 'டெல்டா': இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு டெல்டா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிற நாடுகளில் உருமாற்றம் கண்ட வைரசுகளுக்கும் உலக சுகாதார அமைப்பு கிரேக்கப் பெயர்களை சூட்டியது.

ஒலிம்பிக் - முதல் அணியாக ஜப்பான் சென்ற ஆஸி: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முதல் அணியாக ஜப்பான் சென்றது ஆஸ்திரேலியா. கொரோனா சூழலுக்கு மத்தியிலும், சாப்ட்பால் அணி வீராங்கனைகள் ஒலிம்பிக் களத்திற்கு சென்றனர்.

தென் மாநிலங்களில் வழக்கமான மழைப்பொழிவு: தென்மேற்கு பருவமழையால் தென் மாநிலங்களில் வழக்கமான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com