எடியூரப்பா கடிதம் - துரைமுருகன் விளக்கம்: மேகதாது அணை திட்டத்திற்கு ஒத்துழைப்பு கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து கர்நாடக அரசுக்கு உரிய பதில் தரப்படும் என நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
அறக்கட்டளை நிறுவனர், நிர்வாகி கைது: மதுரையில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவுக்கு தப்பிக்க முயன்ற நிலையில் தேனி மாவட்ட எல்லையில் 2 பேரும் பிடிபட்டனர்.
ரேஷனில் தரமான பொருட்களை வழங்க உத்தரவு: ரேஷன் கடைகளில் தரமாகவும் தங்கு தடையின்றியும் பொருட்களை வழங்க வேண்டும் என கூட்டுறவுத்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
7 மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 7 மாவட்டங்களில் சற்றே பாதிப்பு அதிகரித்துள்ளது.
பழனி - முன்பதிவு செய்தால் மட்டுமே தரிசனம்: திங்கள்கிழமை முதல் கோயில் திறக்கப்படும் நிலையில் முன்பதிவு செய்து அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என பழனி முருகன் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜவுளி, நகைக்கடை ஊழியர்களுக்கு தடுப்பூசி: கொரோனா விதிமுறைகளை கடை உரிமையாளர்கள் கட்டாயம் பின்பற்றுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேட்டியளித்துள்ளார். ஜவுளி, நகை மற்றும் உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
அமமுகவில் இருந்து திமுகவில் ஐக்கியம்: அமமுகவில் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் ஐக்கியமானார்.
மீண்டும் வெடிக்கிறது ரஃபேல் சர்ச்சை: ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடுகளை பிரான்ஸ் வலைத்தளம் அம்பலப்படுத்தியதன் எதிரொலியாக இந்தியாவிலும் விசாரிக்கும் நேரம் வந்துவிட்டதாக காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
உத்தராகண்ட் முதல்வராகிறார் புஷ்கர் சிங் தாமி: உத்தராகண்ட் மாநிலத்தில் முதல்வராகிறார் புஷ்கர் சிங் தாமி. பாரதிய ஜனதா சட்டப்பேரவைத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா அலைகள் ஓய்வதில்லை?: கொரோனா பாதிப்பு குறைந்து வந்த பிரிட்டன், ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று உயர்கிறது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.