அகில இந்திய மருத்துவ படிப்பு - ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு: அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு நடப்பு ஆண்டிலேயே இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீதமும் வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறது.
சமூகநீதி வரலாற்றில் முக்கிய நகர்வு: ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது சமூக நீதி வரலாற்றில் முக்கிய நகர்வு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மேலும் 50 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் என முதலமைச்சர் உறுதியளித்திருக்கிறார்.
பள்ளிகளில் சைகை மொழி அறிமுகப்படுத்தப்படும்: தேசியக் கல்விக் கொள்கை முதலாம் ஆண்டு நிகழ்ச்சியில் மாற்று திறனாளி மாணவர்களுக்கான சைகை மொழி பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.
தமிழ் பண்பாடு என்றால் எரிகிறது: பாரத பண்பாடு பற்றி பேசும்போது இனிக்கும் சிலருக்கு தமிழ் பண்பாடு குறித்து பேசினால் எரிகிறது என தமிழக தொல்லியல் ஆய்வுகள் குறித்த விமர்சனங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்திருக்கிறார்.
புகாரில் சிக்கிய டிஐஜி மீது குற்றப்பத்திரிகை: பாலியல் புகாருக்குள்ளான டிஜிபி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. விழுப்புரம் நீதிமன்றத்தில் 400 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி.
காவல் துறையினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: புதிதாக தேர்வான டிஎஸ்பிக்களுக்கு பணி ஆணை வழங்கும் விழாவில் காவல்துறையினரின் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார்.
கேரளாவில் குறையாத கொரோனா: கேரளாவில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பியிருக்கிறது.
மீண்டும் அதிகரிக்கும் பாதிப்பால் கலக்கம்: தமிழகத்தில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருக்கிறது. தினசரி தொற்று எண்ணிக்கை 100க்கு மேல் உயர்ந்ததால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கூடுதல் தளர்வா? கட்டுப்பாடு அதிகரிப்பா?: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
ஆக. 2 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர ஆணை: ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் அனைத்து ஆசிரியர்களும் தினமும் பள்ளிக்கு வர பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. மாணவர்கள் சேர்க்கை மற்றும் கால அட்டவணை தயாரிப்புக்காக பள்ளிக்கு வர அறிவுறுத்தி இருக்கிறது.
கோவை ஆட்சியருக்கு அதிமுக எம்எல்ஏக்கள் மிரட்டல்?: கோவை ஆட்சியரை மிரட்டும் தொனியில் அதிமுக எம்எல்ஏக்கள் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. கோரிக்கைகள் குறித்து மனு அளித்தபோது ஆட்சியர் எழுந்து நிற்கவில்லை என்ற கோபத்தில் பேசியதாகக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நிலநடுக்கம் - குலுங்கிய வீடுகள்: அமெரிக்காவின் அலாஸ்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. நிலஅதிர்வு 8.2 ரிக்டர் என பதிவான நிலையில் மக்கள் அலறியடித்து ஓடினர்.
சிந்து, சதீஷ்குமார் கால் இறுதிக்கு முன்னேற்றம்: ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து. குத்துச்சண்டை 91 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சதீஷ்குமார் கால் இறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறார்.
ஒலிம்பிக் குத்துச்சண்டை - மேரி கோம் தோல்வி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மேரி கோம் தோல்வியடைந்தார். கொலம்பியா வீராங்கனை விக்டோரியா வேலன்சியா 3-2 என்ற கணக்கில் வெற்றிபெற்றார்.