விரைவுச் செய்திகள்: காற்றழுத்த தாழ்வுப்பகுதி | பெட்ரோல் விலை | யூரோ கோப்பை கால்பந்து

விரைவுச் செய்திகள்: காற்றழுத்த தாழ்வுப்பகுதி | பெட்ரோல் விலை | யூரோ கோப்பை கால்பந்து
விரைவுச் செய்திகள்: காற்றழுத்த தாழ்வுப்பகுதி | பெட்ரோல் விலை | யூரோ கோப்பை கால்பந்து
Published on

மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது கோவாக்சின் தடுப்பூசி மட்டும் செலுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

கல்லணையில் முதல்வர் இன்று ஆய்வு: திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். காவிரியில் தண்ணீர் திறப்பை முன்னிட்டு கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார்.

கொரோனா பாதித்தோருக்கு தடுப்பூசி தேவையில்லை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போட தேவையில்லை என மத்திய அரசுக்கு தேசிய மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

4ஆவது நாளாக ஒரு லட்சத்திற்கு கீழ் பாதிப்பு: இந்தியாவில் 4ஆவது நாளாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்தது. 24 மணிநேரத்தில் 3ஆயிரத்து 403 பேர் உயிரிழந்துள்ளனர்.

கூடுதல் தளர்வுகள் இன்று அறிவிப்பு?: தமிழகத்தில் மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து இன்று அறிவிப்பு வெளியாகிறது. நடை பயிற்சி, டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி போன்ற தளர்வுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பெட்ரோல் விலை ரூ.97 ஐ தாண்டியது: தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 97 ரூபாயை தாண்டியது. விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்தவுள்ளனர்.

மதுரையில் மத்திய அரசு பொறியாளர் கைது: மதுரையில் ஊழல் குற்றச்சாட்டில் மத்திய பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அதில் லஞ்சம் கொடுக்க முயன்ற இரண்டு ஒப்பந்ததாரர்களும் சிக்கினர்.

நீடிக்கும் கனமழையால் பாதிப்பு: மகாராஷ்ராவில் நீடிக்கும் கனமழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மும்பையில் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் தீப்பற்றி எரிந்த வீடுகள்: ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து வீடுகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

100 கோடி தடுப்பூசிகள் - ஜி7 நாடுகள் முடிவு: உலக நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை வழங்க ஜி 7 நாடுகள் முடிவு செய்துள்ளது. 50 கோடி தடுப்பூசிகளை அமெரிக்காவும், 10 கோடி தடுப்பூசிகளை பிரிட்டனும் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர் - இந்திய அணி அறிவிப்பு: இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ள அணிக்கு ஷிகர் தவான் தலைமை வகிக்கிறார்.

யூரோ கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: 24 நாடுகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இத்தாலி அணி துருக்கியை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com