ப்ளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக பெற்றோர், கல்வியாளர்களிடம் இன்றும் கருத்து கேட்கப்பட்டு அந்த அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட முடிவை தமிழ்நாடு அரசு அறிவிக்க உள்ளது.
45+ வயதினரிடம் அதிகரிக்கும் தடுப்பூசி ஆர்வம்: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள 45 வயதிற்கு மேற்பட்டோரிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கோவையில் அனைவருக்கும் தடுப்பூசிபோட வலியுறுத்தி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிக கட்டணம் - கொரோனா சிகிச்சை உரிமம் ரத்து: கோவையில் நோயாளியிடம் அதிக கட்டணம் வசூலித்த புகாரில் தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொற்று குறைந்த பகுதிகளில் சில தளர்வுகள்?: தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஒரே நாளில் 2,713 பேர் உயிரிழப்பு: இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்து 7 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்திருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்திருக்கிறது. 24 மணிநேரத்தில் 2ஆயிரத்து 713 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு மாதத்தில் ரூ. 4 வரை உயர்ந்த பெட்ரோல், டீசல்: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு மாதத்தில் லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கொரோனா- ஆக்சிஜனுடன் வந்த கடற்படை கப்பல்: 158 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு விசாகபட்டினம் வந்தது கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஐராவத். வியட்நாம், சிங்கப்பூரிலிருந்து வென்டிலேட்டர்களையும் கொண்டுவந்தது.
புதுவை - பாஜக அமைச்சர்கள் யார்?: புதுச்சேரியில் சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் பாஜகவின் இரண்டு அமைச்சர்கள் யார்? என்பது குறித்த பட்டியலை கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் இன்று முதல்வர் ரங்கசாமியிடம் அளிக்கின்றனர்.
கருப்பு பூஞ்சைக்கு 30,000 குப்பி மருந்து தேவை: கருப்பு பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த 30 ஆயிரம் மருந்து குப்பிகள் வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
குழந்தைகளுக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்க: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 6 வாரத்திற்குள் உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவுகளை அதிகரிக்கவும் தேசிய மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு தடுப்பூசி - அமெரிக்கா அறிவிப்பு: இந்தியாவுக்கு தடுப்பூசி வழங்க அமெரிக்கா முன் வந்துள்ளது. இதுகுறித்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசி வாக்குறுதி அளித்தார்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்: பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தியதில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளை படம்பிடித்தது அம்பலமானது.
இன்றும் கோடை மழைக்கு வாய்ப்பு: மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தமிழகத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
மோசமான மொழி கன்னடமா?- மன்னிப்பு கேட்ட கூகுள்: இந்தியாவின் மோசமான மொழி என கன்னட மொழியை குறிப்பிட்ட விவகாரத்தில் மக்களிடம் கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியது.
ஒலிம்பிக்கிற்கு தயாராகும் இந்தியா-பதக்கம் அறிமுகம்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியாவின் தயார் நிலை குறித்து பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். ஜப்பானில் வீரர், வீராங்கனைகளுக்கான பதக்கங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ஃபெடரர், ஜோகோவிச் முன்னேற்றம்: ஃபிரெஞ்சு ஓபன் டென்னிஸில் ஃபெடரர், ஜோகோவிச் முன்னேற்றமடைந்துள்ளனர். முதல் நிலை வீராங்கனை ஆஸ்லே பார்ட்டி காயத்தால் தொடரில் இருந்து பாதியில் விலகினார்.