விரைவு செய்திகள்: தடுப்பூசி மையம் | ஊரடங்கு நீட்டிப்பு? | கருப்பு பூஞ்சை மருந்து

விரைவு செய்திகள்: தடுப்பூசி மையம் | ஊரடங்கு நீட்டிப்பு? | கருப்பு பூஞ்சை மருந்து
விரைவு செய்திகள்: தடுப்பூசி மையம் | ஊரடங்கு நீட்டிப்பு? | கருப்பு பூஞ்சை மருந்து
Published on

சென்னை துறைமுகம் பகுதியில் கொரோனா தடுப்பூசி மையத்தை தொடக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதில் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பருப்பு டெண்டருக்கு தடை - அரசு மேல்முறையீடு: பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு உயர்நீதிமன்ற கிளை தடைவிதித்ததை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மனுவாக தாக்கல் செய்தபிறகு விசாரணை நடத்துவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தடுப்பூசி போட திரண்ட இளைஞர்கள்: சேலம், மதுரையில் தடுப்பூசி போட ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் திரண்டனர். தனிமனித இடைவெளி இல்லாமல் நிற்பதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குடியிருப்புப் பகுதிகள், சாலைகள் நீரில் மூழ்கின: கன்னியாகுமரியில் மூன்றாவது நாளாக மழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளித்து வருகிறது. சாலைகளிலும் நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

திற்பரப்பு அருவியை மூழ்கடித்த வெள்ளம்: தொடர் மழையால் திற்பரப்பு நீர்வீழ்ச்சியே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கோதையாறு, தாமிரபரணியிலும் வெள்ளநீர் பாய்ந்தோடுகிறது.

கொரோனாவால் இறந்தவரின் உடலை எரியூட்ட எதிர்ப்பு: பெரம்பலூரில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை எறியூட்ட எதிர்ப்பு தெரிவித்து மயானத்தின் அருகே பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கருப்பு பூஞ்சை - ஆம்போடெரிசின் மருந்து ரூ.1200: கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின் மருந்தின் விலை 1200 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வர்தா நிறுவனம் தயாரிக்கும் இந்த மருந்து திங்கள்கிழமை முதல் விற்பனைக்கு வருகிறது.

ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? - ஆலோசனை: தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவத் துறை, வருவாய் துறை, காவல்துறையினருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,847 பேர் பலி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 3,847 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே நாளில் 2,11,000 பேர் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

தமிழகத்தில் தடுப்பூசி போடுவது அதிகரிப்பு: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவது அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 2 லட்சத்து 64 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

தமிழில் பொறியியல் கல்வி - ஏஐசிடிஇ: தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பொறியியல் கல்வி வழங்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இவை அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

வங்கிக் கணக்கில் இருந்து ரூ.53 லட்சம் திருட்டு: சென்னையில் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 53 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. போலியான தொலைபேசி அழைப்பு மூலம் செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணை கேட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.

பள்ளியின் முதல்வர், தாளாளருக்கு சம்மன்: தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை மும்முரப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் விசாரணைக்கு ஆஜராக, சென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.

டொமினிகா நாட்டில் சிக்கினார் மெகுல் சோக்சி: 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த வைர வியாபாரி மெகுல் சோக்சி டொமினிகா நாட்டில் சிக்கினார்.

அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் இன்று பேச்சு: அமெரிக்க அமைச்சர்களுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாஷிங்டனில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். பைடன் அரசு அமைந்தபின் முக்கியத்துவம் பெறும் இந்திய அமைச்சரின் முதல் சந்திப்பு இதுவேயாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com