தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23, 975 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஜனவரி ஒன்றாம் தேதி 1,489 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தொடர்ந்து தொற்று பரவல் வேகம் அதிகரித்தது. ஜனவரி 11-ஆம் தேதி பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டிய நிலையில், 13-ஆம் தேதி 20, 911 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 15-ஆம் தேதி 23,989 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23, 975 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது முந்தைய நாளைவிட 14 பேருக்கு குறைவாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தொற்று பாதித்து ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 476 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 12, 484 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 22 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் சென்னையில் ஜனவரி ஒன்றாம் தேதி 683 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 13 மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் 24 மணி நேரத்தில் 8, 987 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். முந்தைய நாளையவிட 9 பேருக்கு கூடுதலாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்டங்களை பொறுத்தவரை, செங்கல்பட்டில் 2,701 பேருக்கும், கோவையில் 1,866 பேருக்கும், திருவள்ளூரில் 1,273 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 831 பேருக்கும், கன்னியாகுமரியில் 678 பேருக்கும், திருப்பூரில் 619 பேருக்கும், மதுரையில் 569 பேருக்கும், திருச்சியில் 453 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.