"புராண காலத்திலிருந்தே தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்" நடிகர் கருணாஸ் !

"புராண காலத்திலிருந்தே தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்" நடிகர் கருணாஸ் !
"புராண காலத்திலிருந்தே தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்" நடிகர் கருணாஸ் !
Published on

புராண காலத்திலிருந்தே வட இந்தியர்கள் தமிழர்களை ஒதுக்கி வருகின்றனர் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பிரச்னை தொடர்பாக நடிகரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனரும் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் " அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது பற்றி அந்தக் காட்சி தான் முடிவெடுக்க வேண்டும். ஏ.ஆர்.ரகுமான் பிரச்சனை இன்று நேற்று நடப்பதில்லை. நடிகர் கமல்ஹாசன் திரைப்படம் இந்தியில் வெற்றி பெற்றபோது அவர் தமிழர் என்பதற்காக வட இந்தியாவில் புறக்கணிக்கப்பட்டார் என்பதுதான் உண்மை" என்றார்.

மேலும் தொடர்ந்த கருணாஸ் " புராண காலத்திலிருந்தே வட இந்தியர்கள் தமிழர்களை ஒதுக்கி வருகின்றனர். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தால் தமிழகத்தில் வட இந்தியர்கள் தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். இனி தமிழகத்தில் தமிழர்களுக்கு இடம் இருக்காது. இதேபோல்தான் ஏஆர் ரகுமான் வட இந்தியர்களால் ஒதுக்கப்பட்டுள்ளார். சிலர் லைக்வேண்டும் என்பதற்காக சமூகவலைத்தளத்தில் எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றனர். அதுபோன்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் கருப்பர் கூட்டத்தினர்" என்றார்.

மேலும் " சினிமாவில் குருபீசம் என்பது எப்போதும் உள்ளது. தமிழ் சினிமாவில் எப்போதும் சமூக கருத்துக்கள் வந்தது கிடையாது. இனி வரப்போவதும் கிடையாது. இங்கு அனைவரும் பணம் சம்பாதிப்பதற்காக தான் சினிமா எடுத்து வருகின்றனர். யாரும் சமூக கருத்துக்கு படம் எடுக்கவில்லை" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com