"சமூக நீதிப்பாதையில் பயணித்து சமூக நல சேவகராக கடமையாற்றுவேன்" - தவெக-ன் உறுதிமொழி என்ன?

"..பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைபிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்” என தவெக மாநாட்டில் உறுதி மொழி ஏற்கப்பட்டிருந்தது.
விஜய்
விஜய்pt web
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி சாலையில் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. 4 மணிக்கு மேடைக்கு வந்த விஜய் தொண்டர்களுக்கு கையசைத்தார்.

தவெக மாநாடு விஜய்
தவெக மாநாடு விஜய்

ராம்ப் வாக்கை முடித்துக்கொண்டு மேடைக்கு வந்த விஜய் தொண்டர்களின் உற்சாகத்தைக் கண்டு கண் கலங்கினார். தமிழ்நாட்டின் மன்னர்களுக்கும், சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், மொழிப்போர் தியாகிகளுக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றினார். பின் கட்சிக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

உறுதி மொழியில், “நமது நாட்டின் விடுதலைக்காவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து வீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதும், இறையான்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன்,

TVKMaanadu
TVKMaanadu

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப்பாதையில் பயணித்து சமூக நல சேவகராக கடமையாற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் கலைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப்பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைபிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்” என உறுதி மொழி ஏற்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com