உயிரிழப்புகளை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து கொண்டிருப்பதாக, திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் குறித்து எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை, தமிழ்நாடு அரசின் நிவாரண உதவிகள் மீட்டெடுக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் விஷ சாராய சம்பவங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அரசு எச்சரித்துள்ளதாகவும், உயரதிகாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் கடுமையான உத்தரவுகள் பிறப்பித்திருப்பதாகவும் தமிழச்சி தங்கப்பாண்டியன் சுட்டிக் காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியினர் சாவில் அரசியல் செய்து கொண்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டபோதும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போதும், அப்போதைய அரசாங்கங்கள் ஒன்றுமே நடக்காதது போல மூடி மறைக்கப் பார்த்ததாக திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் விமர்சித்துள்ளார்.